தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாளை கூடுகிறது புதுவை சட்டப்பேரவை: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை கூடுகிறது. இதில் 4 மாத செலவினங்களுக்கான

News image
Updated On :29 மார்ச் 2017, 10:47 am

தினமணி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை கூடுகிறது. இதில் 4 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறாரர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆளுநர் உரையின்றி நடைபெற்றது. இந்நிலையில் 4 மாத அரசின் செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால், வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்திருந்தார்.

அதன்படி வியாழக்கிழமை 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு பேரவை கூடுகிறது.
நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த நாளான வெளளிக்கிழமை 31-ம் தேதி பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட் தொடர்ந்து தாக்கல்

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமயிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கலானது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்தலில் வென்று பதவியேற்ற முதல்வர் நாராயணசாமி அரசும், இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருகிறது. மாநில திட்டக்குழுக் கூட்டம் நடைபெறாத நிலையில் தற்போது தொடர்ந்து 7-வது ஆண்டாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிரது.

ரூ.6650 கோடிக்கு பட்ஜெட்

புதுச்சேரியின் பட்ஜெட் தொகை ரூ.6650 கோடியாக உள்ளது. இதில் மாநில வருவாய் ரூ.4 ஆயிரம் கோடியாகும். மீதித்தொகையை மத்திய அரசு மூலமும், கடன்கள் மூலம் மாநில அரசு பெறுகிறது. திட்டமல்லாச் செலவுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி தர வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இணை பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் புதுவைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரியாத நிலை உள்ளது. அதுகுறித்து தெரிந்தால் தான் ஏப்ரல் மாதம் பேரவையைக் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.