நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொழில்முனைவோர் பயிற்சி மையம், திறன் மேம்பாட்டு மையங்களுக்குஜூன் மாதம் அடிக்கல் நாட்டு விழா: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் தொழில்முனைவோர் பயிற்சி மையம், திறன் மேம்பாட்டு மையங்களுக்கு மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை

News image
Updated On :8 மே 2017, 3:53 pm

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்முனைவோர் பயிற்சி மையம், திறன் மேம்பாட்டு மையங்களுக்கு மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்ட உள்ளார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பட்ஜெட் திட்ட வரைவு ரூ.6645 கோடிக்கு அனுமதி பெறுதல், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும் முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவர் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனிருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூட்டிய வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டார். இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

ரூ.250 கோடியில் சிறு, குறு, தொழில்முனைவோருக்கான பயிற்சி மையம், திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகளை மாநில அரசு செய்துள்ளது. இதற்கான அடித்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கோரிக்கை வைத்தோம். வரும் ஜூன் மாதம் 15 தேதியில் இதற்கான விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மீனவர்கள் பிரச்னை

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 காரைக்கால் மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 10 படகுகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தேன். இப்பிரச்னை மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற பல்வேறு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து பாதிக்கப்பட்டோர் நிலை குறித்து விளக்கினேன்.

புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆள்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள், அரசால் தொடங்கப்படும் புதிய இணையதளம் (வெளிநாட்டு வேலை தொடர்பாக இணையதளத்தில் (Portal) பதிவு செய்திருக்க வேண்டும். அவர்கள் தான் ஆள்களை வேலைக்கு அனுப்ப முடியும். இல்லையென்றால் ஆள்களை தன்னிச்சையாக அனுப்பும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.