கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!

சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில்

News image
Updated On :6 அக்டோபர் 2017, 5:27 am

DIN

துருக்கிய மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில், தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி (42), அவரது மகள் காதா பிரின்சி (21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதன்முறை என்ற மருத்துவர்கள், மருத்துவத் துறையில் இது ஒரு 'அதிசயம்' என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.