வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்: 20 ஆயிரம் பேர் பங்கேற்பு

அரசு விதிகளை மீறி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களை கண்டித்து திருநெல்வேலி

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 11:45 am

ஷேக் அப்துல்காதர்

அரசு விதிகளை மீறி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையாபுரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, ஊடுதாழை, பெரியதாழை மேற்கு, ஜார்ஜ் நகர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிச் சட்டம் 1983 ன்படி விதிகள் நடைமுறையில் உள்ளது.

விசைப்படகு மீனவர்கள் அரசு விதியை மீறி இரவு நேரங்களில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் விதிகளை மீறி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு இரவு நேரங்களில் சென்று மீன் பிடிப்பதோடு, நாட்டுப்படகு மீனவர்களின் படகுகளை உடைத்து சேதப்படுத்தியும், மீன் வலைகளை அழித்தும் வருகின்றனர்.

இதனை கண்டித்தும், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, மீனவர் சங்க பிரதிநிதி ஜூடு கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனவர்களில் 90 சதவீதம் பேர் நாட்டுப்படகு வைத்து மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு மீனவர்கள் அரசு விதிகளை மீன் பிடிப்பதோடு மட்டுமின்றி எங்களது மீன் வலைகள், நாட்டுப்படகுகளை உடைத்து சேதப்படுத்தியும் வருகின்றனர்.

இதனால், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்தும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திங்கள்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

கோரிக்கை:  பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மீனவர்கள் தெரிவித்தனர். அப்போது, மீனவர் சங்க நிர்வாகிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.