47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இக்பால் காஸ்கரின் மற்றொரு கூட்டாளி கைது

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் இக்பால் காஸ்கரின் கூட்டாளியான மற்றொரு கூட்டாளி தொழிலதிபர் கைது

News image
Updated On :29 செப்டம்பர் 2017, 6:13 am

DIN

மும்பை: தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் இக்பால் காஸ்கரின் கூட்டாளியான மற்றொரு கூட்டாளி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தானே, புனே ஆகிய இடங்களில் தட்டிடத் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக சமீபத்தில் மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் காஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

இந்நிலையில், பேரிவிலி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த பங்கஜ் கங்கார் என்பவரை தானே போலீஸார் கைது செய்தனர். காஸ்கருடன் கூட்டாளியாக செயல்பட்டவர் பங்கஜ் கங்கார்.

காஸ்கர் மற்றும் அவரது கும்பலுக்கு பங்கஜ் கங்கார் பண உதவி செய்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளது. 

தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கார் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளின் காவலை வரும் புதன்கிழமை வரை நான்கு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 

இக்பால் கஸ்காருக்கு எதிரான விசாரணையை அமலாக்க இயக்குநரகம் தொடங்கியது. விசாரணையில் மேலும் மூன்று பேரிடம் பணம் கையகப்படுத்தியதோடு, சொத்துகளை சட்டவிரோதமாகவும் மாற்றியதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் பறிக்கும் கும்பலின் பின்னணியில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல் இருப்பதாகவும் வழக்கில் அவர் உட்பட 4 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.