முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: காவல்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 8:06 pm IST

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது. அதிகப்பட்சமாக வேலூரில் 21 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. 

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்திருந்தது. 

பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர்.  சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் 85 ஆயிரம் பேருக்குமேல் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.