எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் ஆர்.பி.ஐ மூத்த அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை 

 பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ.12,700 கோடி மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 5:26 pm IST

புதுதில்லி:  பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ.12,700 கோடி மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வங்கியில் பணிபுரிந்த அலுவலர்களின் உதவியுடன் போலி உத்தரவாதக் கடிதங்களைக் கொடுத்து அவர் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார். இந்த மோசடியை, வங்கி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கண்டறிந்து, சிபிஐயில் புகார் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, நீரவ் மோடி, அவரது மனைவி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வைரம் மற்றும் தங்க நகை வர்த்தகர் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நஷ்டத்திற்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.

இதனிடையே இந்தப் புதிய புகார் தொடர்பாக, வங்கியின் நிர்வாக இயக்குநர் பிரமாஜி ராவ் மற்றும் இரு வங்கி மூத்த மேலாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என பலரிடமும், சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அதுபோலவே சோக்ஸி நிறுவனங்களின் 66 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரனை மேற்கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.