ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்
சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை ரயில் நிலையத்தில் போலீஸார் பறிமுதல் செய்து


மும்பை: சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை ரயில் நிலையத்தில் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து ரயில் மூலம் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மும்பை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது அவரிடமிருந்து 10 ஆயிரம் கைக்கடிகாரங்கள், 6 ஆயிரம் ப்ளுடூத் ஸ்பீக்கர்கள், 17 ஆயிரம் மொபைல் ஸ்கிராட்ச் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒருவரைௌ கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...