ஜப்பானில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.


டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் (7.5 மைல்கள்). ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கதத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...