சுவிட்சர்லாந்தில் விமான விபத்து: 20 பேர் பலி

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து: 20 பேர் பலி


ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பழமையான விமானங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நேற்று சனிக்கிழமை குட்டி விமானம் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் குழந்தைகள் உள்பட 4 பேர் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கும்போது, டிசினோ நகரில் இருந்து 20 பேருடன் புறப்பட்ட, இரண்டாம் உலகப்போரின்போது தயாரிக்கப்பட்ட பழமையான சிறிய ரக ஜேயு52 எச்பி-எஓடி விமானம், ஜூரிச்சில் தரையிறங்க வேண்டும். ஆனால், ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் ஒரு பகுதியான பிஸ் செக்னாஸ் மலை மீது மோதி நொறுங்கி விழுந்ததில், விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியினரும் அவரது மகன் உள்பட 11 ஆண்கள், 9 பெண்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது. மலைப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் 2,540 மீட்டர் தூரத்தில் விபத்து நடந்ததால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் அனிடா சென்டி கூறுகையில், இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட பழைய ஜங்க்கர் ரக விமானத்தில் 20 பேர் பேர் பயணித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக செக்னாஸ் மலைமீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேரும் உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 5-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

விமானம் மோதிய வேகத்தில் வெடித்ததுதான் அனைவரும் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறினார். 

ஜேயு52 எச்பி-எஓடி விமானம் கடந்த 1939-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. விமான விபத்து குறித்து தகவல் அறிந்த விமான தயாரிப்பு நிறுவனமான ஜேயு வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சேவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com