மும்பை விமான நிலையம் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு சாதனை!

மும்பை விமான நிலையம் ஜனவரி 20-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
மும்பை விமான நிலையம் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு சாதனை!
Updated on
1 min read

மும்பை: மும்பை விமான நிலையம் ஜனவரி 20-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ஒரே ஓடுதளத்தை கொண்டு, உலகின் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் விமான நிலையமாக மும்பை விமான நிலையம் விளங்குகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி 24 மணி நேரத்தில் 974 விமானங்களை கையாண்டு சாதனை படைத்தது.

மும்பை விமான நிலையம் உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் ஒற்றை ஓடுதள விமான நிலையம் ஆகும். அங்கு எப்போதுமே விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் வரிசையில் காத்து கிடக்கும். ஒரு விமானம் புறப்பட்ட, சிறிது நேரத்தில் அடுத்த விமானம் தரையிறங்கும். இப்படியே மாறி மாறி விமானங்கள் இயங்கியபடி இருக்கும். அங்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 974 விமானங்களை கையாண்டு சாதனை படைத்தது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டுள்ளது. இதன்மூலம், கடந்த டிசம்பர் மாதம் படைத்த தனது சொந்த சாதனையையே, மும்பை விமான நிலையம் தற்போது முறியடித்துள்ளது.

உலகிலேயே மிகவும் திறமையான விமான நிலையமான இங்கிலாந்தில் உள்ள கேட்விக் ஒற்றை ஓடுபாதை விமான நிலையமும் கோடைக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 870 விமானங்களை இயக்குகிறது. இவ்விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 55 விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மும்பை விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 52 விமானங்களை இயக்கியுள்ளது. 

லண்டனில் ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட் மற்றும் லூடன் என நான்கு விமான நிலையங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இரண்டு செயல்பாட்டு ஓடுபாதைகள் இருந்தாலும், கேட்விக், ஸ்டான்ஸ்டெட் மற்றும் லூடன் விமானநிலையங்கள் ஒற்றை ரன்வே மூலம் இயங்கி வருகிறது.

பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிய அளவில் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் மும்பை விமான நிலையம் 14-வது இடத்தில் உள்ளது. 

கடந்த 2016-இல் மும்பை விமான நிலையம் 4 கோடியே 44 லட்சத்துக்கு 80 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com