மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி
மின் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும்


மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின.
தமிழ்நாடு மின்சார வாரியம், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன.22-ஆம் தேதி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை ஆணையர் பங்கேற்புடன் நடைபெற்றது.
இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்பு போராட்டம் என தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி வருகிறது.
இருப்பினும், 27 மாதங்கள் கடந்தும் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 72 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள், 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், 6 ஆயிரம் பகுதி நேர ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டைதொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்த முறையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிப்ரவரி 16-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உள்ளனர். எனினும் மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...