ஒவ்வொரு வாக்குச்சாவடியுமே நமது இலக்கு: கர்நாடகாவில் அமித்ஷா பேச்சு
கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க தேசியதலைவர் அமித்ஷா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றார்.
பந்த்வால் பகுதியில் இன்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் “தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை கண்டு கொள்ள வேண்டாம். கட்சியின் சின்னமான தாமரையையும், மோடியின் புகைப்படமும் போதும். சட்டப் பேரவைத் தொகுதி உங்களது இலக்கு அல்ல. ஒவ்வொரு வாக்குச்சாவடியுமே நமது இலக்கு என்று பேசினார்.
மேலும், ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் நாம் முழுமையான வெற்றி பெறலாம். 4 கோடி வாக்களர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

