அமித்ஷா வருகை பாஜகவுக்கு அமாவாசையாக இருக்கும்: திருநாவுக்கரசர்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை பாஜகவுக்கு அமாவாசையாகதான் இருக்கும் விடியல் எதுவும் ஏற்படபோவதில்லை என்று


சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை பாஜகவுக்கு அமாவாசையாகதான் இருக்கும் விடியல் எதுவும் ஏற்படபோவதில்லை என்று காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாகப் பிரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே 10, 11 தேதிகளில் அமித்ஷா சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தான நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷா, கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள தங்க கடற்கரை அரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெறும் பாஜக தேர்தல் முன் தயாரிப்புக் கூட்டம், சங்க் பரிவார் கூட்டங்களிலும் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தலைச் சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரி அரசியல் நிலவரம், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில், அமித்ஷா சென்னை வருகை குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, அமித்ஷா சென்னை வருகையால் விடியல் எதுவும் ஏற்படபோவதில்லை; பாஜகவுக்கு அமாவாசையாகதான் இருக்கும். அமித்ஷாவின் 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார்.
மேலும், பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மற்ற கட்சிகளின் கருத்து மற்றும் திருத்தங்கள் செய்து லோக் ஆயுக்தாவை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...