

சீனாவில் உள்ள குவிங்டோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன
இந்த ஒத்துழைப்பு மாநாட்டில் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது, அதன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிய பிரச்னைகளை இம்மாநாட்டில் இந்தியா எழுப்பும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.