சியோல்: தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில்(92) உடல் நல குறைவால் இன்று காலமானார்.
தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில். இவர் அந்நாட்டின் உளவு பிரிவை உருவாக்கியவர். கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பின்னர் அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளார்.
நாட்டில் இரு முறை பிரதமராக பதவி வகித்த கிம் ஜாங் பில் உடல் நல குறைவால் சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வட கொரியாவுடன் ஜனநாயக முன்னேற்றம் மற்றும் சமதான முயற்சிகளுக்காக 2000-இல் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
கிம் ஜாங் தேசிய சட்டப்பேரவையில் ஒன்பது முறை பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பின்னர் 2004-இல் அரசியலை விட்டு வெளியேறினார்.
கிம் ஜாங் பில் இறுதி ஏற்பாடுகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


