நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் 20 ஆல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மற்றும் 73 மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை
நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் 20 ஆல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மற்றும் 73 மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  அங்கீகரித்துள்ளது.

இதற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின்கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை  உருவாக்கவும்,  அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நாடெங்கும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் கிடைப்பதை சீராக்குவதையும், இதுவரை மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத மாநிலங்களில் மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்  அமைக்கப்படுவதால், மருத்துவத் துறை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என சுமார் மூவாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  அங்காடி மையங்கள், சிற்றுண்டி நிலையங்கள் போன்றவை புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகளில் ஏற்படும் போது மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.  

மேலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படுவதால் மருத்துவக் கல்வி மாற்றியமைக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் மருத்துவ பராமரிப்பு பணியாளர்களின் பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.  புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கும் திட்டம் முற்றிலும் மத்திய அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.  மேலும், இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவினங்களையும் முழுவதுமாக மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அதிசிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் / அவசர சிகிச்சை மையங்கள் போன்றவை அமைப்பதன் மூலம் மருத்துவ அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனைகளின் இயக்க, பராமரிப்பு செலவுகளை  மத்திய அரசே ஏற்கும்.  அதிசிறப்பு மருத்துவப் பிரிவுகள், விபத்து பிரிவுகளை தொடங்கவும், கருவிகளை வாங்கவும் ஆகும் செலவை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com