இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்: பலி எண்ணிக்கை 1,203 - ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,203 -ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள்
இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்: பலி எண்ணிக்கை 1,203 - ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,203 -ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. குறிப்பாக சுலாவேசி தீவினை இந்த பேரலைகள் புரட்டிப் போட்டன. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் தீவின் கட்டமைப்பையே சீரழித்தன.

பாலூ நகரில் பெரும்பாலான கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சிதைந்து போயுள்ளன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. போதிய வசதிகள் இன்றி மீட்பு பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளதால் இலக்கை அடைவது சவாலானதாக உள்ளது. தொலைத் தொடர்பு சேவைகளும் மிக குறைந்த அளவுக்கே உள்ளது. இடிந்து விழுந்த கட்டடங்களைப் பார்க்கும்போது மீட்பு பணிகளை மேற்கொள்ள தற்போதுள்ள கனரக இயந்திரங்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாத நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுனாமிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 -ஐ தொட்டுள்ள நிலையில், இந்தோனேஷிய காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தோனேஷியாவில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதில் 61 பேர் வெளிநாட்டவர் ஆவர். தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு பாலூ நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. எங்கும் கட்டட இடிபாடுகள், பிணக்குவியல்களாக காட்சியளிப்பதால், மக்கள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக கடைகளை சூறையாடி வருகின்றனர்.

சுனாமி பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இந்தோனேஷிய அரசு ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது.  

மீன்பிடி நகரமான டோங்காலாவில் இடிபாடுகள் அதிகமாக இருப்பதாலும், தொலைத் தொடர்பு மற்றும் மின்இணைப்பு இல்லாததாலும் மீட்புப் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com