இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உத்தரகாண்ட்டில் மலைப்பகுதி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 21 பேர் படுகாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர்

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 3:07 am

DIN

அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். 21-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பத்ரோக்ஜன் - பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.