தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அதிமுக நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், தினகரன் பெயர்!

ஆளும் அதிமுக நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 12:04 pm

DIN


சென்னை:  ஆளும் அதிமுக அரசு நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி, டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான நிறைவு விழா அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பெயரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அமமுக துணைபொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளன.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி வாழ்த்துரை என்று போட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் கொடுத்து கடைசியில் மாவட்டச்செயலாளர்களுக்கு கீழே அவரது பெயர் அழைப்பிதழில் உள்ளது. இதன் காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்பது தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.