பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது: தமிழிசை பரபரப்பு பேட்டி

திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது என்று திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2019, 2:04 pm

DIN


கடலூர்: திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது என்று திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது பால் விலை உயர்வை அரசியலாக்குவது வேடிக்கையாக உள்ளது. 

இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என சந்தேகம் எழுகிறது என்றவர், திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார். 

மேலும், காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின், அவருக்கு மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமராவதை தடுத்ததும், அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராவதை எதிர்த்ததும் திமுக தான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.