கனமழை காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (டிச.3,4) மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தவிர்த்து, கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஏதேனும் ஒரு வார விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை: ஓ. பன்னீர்செல்வம்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! இந்தியா வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

