
ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது.
அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.
உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக குறை கூறுவது தேர்தலை சந்திக்க பயப்படுக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. இடைத்தேர்தல் தோல்வியால் திமுகவுக்கு இன்னும் தோல்வியால் திமுகவுக்கு இன்னும் காய்ச்சல் தணியவில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.