கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

தலைநகர் தில்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்(81) இன்று காலமானார். அவரது மறைவுக்கு

News image
Updated On :20 ஜூலை 2019, 11:13 am


புதுதில்லி: தலைநகர் தில்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்(81) இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷீலா தீட்சித் இன்று மதியம் 3.30 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். காலமான ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டு (3 முறை) தில்லி மாநில முதல்வராக பதவி வகித்தவர். அண்மையில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் தில்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டவர்.

ஷீலா தீட்சித் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

காங். மூத்த தலைவர் ஷீலா தீட்சித் மறைவுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜம்மூ-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.