நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரோ! பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டிவிட்

நிரபராதியை விடுதலை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்
நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரோ! பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டிவிட்
Published on
Updated on
1 min read


சென்னை: நிரபராதியை விடுதலை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டிவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. அதன் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், து.ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து ஆளுநரிடம் நிலுவையிலுள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க உரிய வழிகாட்டுதலைத் தருமாறு வேண்டுகோள் விடுத்து மனு அளித்தனர். 

இந்நிலையில், அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்க பதிவில், அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு கடந்தும் நிரபராதி விடுதலை செய்யனும்னு சம்மந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனா? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரோ! 

29 ஆண்டு அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும் என்னுயிர் இருகும்போதே கோப்பில் மை படட்டும் என பதிவிட்டுள்ளார். 

1 ஆண்டு முடிந்தும் இந்த காத்திருப்பு கவலையையும், மன அழுத்தத்தை தருவதாக தெரிவித்துள்ளார். 

மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ராம் ஜெத்மலானி எனும் மரண தண்டனை ஒழிப்பு போராளி மறைந்து போனார். மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சாமானியர்களுக்காகவே சட்ட அறிவை பயன்படுத்தியவர். சத்ருகன் சவுகான், ஸ்ரீகரன் வழக்குகளில் அவரது வாதங்கள் வரலாறு உள்ளவரை பேசும். அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com