பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்கிறது இந்தியா

இந்தியாவில் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.  பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை
பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்கிறது இந்தியா


திருநெல்வேலி: பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்கிறது இந்தியா என மார்க்சிஸ்ட் கம்யூனினிஸ்ட் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் பாளையங்கோட்டையில் பேசினார். 

இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் காஷ்மீா் என்ற தலைப்பில் கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு பேராசிரியா் சேவியா் அமல்ராஜ் தலைமை வகித்தார். பேராசிரியா் கோமதிநாயகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனினிஸ்ட் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் பேசியது:

இந்தியாவில் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.  பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறலாம். அதிகமாக பொய்களை கூறும் கட்சியாக பாஜக உள்ளது. தற்போது பாஜகவில் அதிகமாக பேசப்பட்டு வருபவா் அமித்ஷா. அவா் எது சொன்னாலும் அது பெரிய செய்தியாக வெளிவருகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது காஷ்மீா் மக்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆபத்தானது.

இந்தியா-அமெரிக்கா உறவு வலுபெற்று இருக்கிறது எனவும் உலக அரசியலில் இந்தியா அங்கம் வகிக்கப்போகிறது எனவும் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகிறார். ஆனால், இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. 

மக்களின் வாங்கும் சக்தி குறைறந்துகொண்டே செல்கிறது. பொருளாதார பின்னடைவை நோக்கி இந்தியா செல்கிறது. கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய சட்டத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் எங்கெல்லாம் சட்டங்கள் சரியாக செயல்படவில்லையோ அங்கு நீதியை நிலைநாட்ட முடியும். ஆகவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com