கேரளாவில் கனமழைக்கு 85 பேர் உயிரிழப்பு 

கேரள மாநிலத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி
கேரளாவில் கனமழைக்கு 85 பேர் உயிரிழப்பு 


கேரள மாநிலத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மாயமான 53 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பெய்து வரும் மழையால் வயநாடு, மலப்புரம், கொச்சி, கண்ணூர், இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில், 9 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை காரணமாக 24 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவில் ஏற்பட்டு வருகிறது. வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் புத்துமலை என்னும் குன்று தரைமட்டமானது. அங்கு ஒரு கோயில், ஒரு தேவாலயம், ஒரு மருத்துவமனை, பல குடியிருப்புகள் மண்ணுக்கு அடியில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி இறந்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்கு அடியில் மேலும் பலர் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கனமழை வெள்ளத்திற்கு ஆகஸ்ட் 8 மற்றும் 12 ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான 53 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், வனத் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com