இந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301; பலி 56

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2301 பேர் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301; பலி 56
Updated on
1 min read



புதுதில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2301 பேர் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட வைரஸ், ஒட்டுமொத்த உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்கா கரோனாவால் ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்தியாவிலும் நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 ஆக உயர்ந்துள்ளது. இதில் 157 பேர் குணமாகி உள்ளனர். ஒருவர் குணமாகி வெளிநாடு சென்றுவிட்டார். பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், 309 பேருடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com