கரோனா: ஜம்முவில் பெண் பலி
ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 61 வயதுடைய ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தார். இது ஜம்முவில் முதல் கரோனா பலி.


கரோனா: ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 61 வயதுடைய ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தார். இது ஜம்முவில் முதல் கரோனா பலி.
இந்தியாவிலும் தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் 5 ஆயிரத்து 734 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 473 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்முவில் 61 வயதுடைய பெண் ஒருவர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்த நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஜம்முவில் கரோனாவுக்கு முதல் பலியாகும்.
ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் புதிததாக 34 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...