கரோனா நோய்த்தொற்றின் 6 புதிய அறிகுறிகள்
கரோனா நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை புண் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு போன்றவை


கரோனா நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை புண் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு போன்றவை நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றன.
வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்றால், தொற்றின் மருத்துவ புரிதல் முன்னேற்றம் கண்டுள்ளது.
கரோனா தொற்று பாதித்த நோயாளிகள் லேசான அறிகுறிகள் முதல் கடுமையான பலவிதமான சிக்கல்களை அனுபவிக்கின்றனர். நோய்த்தொற்று அறிகுறிகள் பொதுவாக தொற்று பாதிக்கப்பட்ட 2-14 நாட்களுக்குப் பிறகே அறிகுறிகளைக் காட்டத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சோதனை மையங்களுக்கு ஒரு நோயாளிக்கு ஒரு தொற்று அறிகுறி தேவைப்படும் நிலையில் தொற்றின் அறிகுறிகள் மாறிக்கெண்டே இருக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள் பொதுமக்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய மூன்று அறிகுறிகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் புதிதாக ஆறு அறிகுறிகளை மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவை கரோனா அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் "உடனடியாக மருத்துவ சிகிச்சை" பெறுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நுகர்வுத்தன்மை இழத்தலும், சுவையை உணராமையும் கரோனா நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகள் என பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் கண்கள் சிவந்து போவதும் தொற்று அறிகுறியாக கண் மருத்துவர்கள் பார்க்கின்றனர். மெட்ராஸ் ஐ அல்லது கண் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளுடன் வருவோரையும் தொற்று அபாயம் உடையவர்களாகவே கருதி எச்சரிக்கையுடன் அணுகுவதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு சமீபத்திய நிகழ்வின்படி, தொற்று பாதித்த நோயாளியின் கால்களிலும் கால்விரல்களிலும் ஊதா அல்லது நீல நிற புண்கள், பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே தோன்றும், இது “கொவைட் கால்விரல்கள்” என அழைக்கப்படுகிறது.
வல்லுநர்களால் இந்த நிலையை சுட்டிக்காட்ட முடியவில்லை என்றாலும், இது அதிகப்படியான வீக்கம், இரத்த நாளங்கள் உறைதல் அல்லது பர்புரா ஃபுல்மினான்ஸ் எனப்படும் த்ரோம்போடிக் கோளாறு என்று சிலர் கருதுகின்றனர்.
"நோய்த்தொற்று பெரிய தமனி பகுதிகளில் பாதிப்பை அதிகரிப்பதாக தெரிகிறது, இது கடுமையான பக்கவாதத்திற்கு வழிவகுப்பதாக" மருத்துவர் தாமஸ் ஆக்ஸ்லி தெரிவித்துள்ளார்.
சில மருத்துவர்கள் 30 மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த தொற்று திடீர் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தனர், இது இரத்த உறைவு பிரச்னைகளின் விளைவாகக் கூட இருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்னைகள் அடிக்கடி காணப்படுவதாக கூறுகின்றனர்.
"கடந்த இரண்டு வாரங்களில் இளம் நோயாளிகளுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவதில் ஏழு மடங்கு அதிகரிப்பதை அறிக்கைகள் தெரிவிக்கிறது" என்று நியூயார்க் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆக்ஸ்லி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...