விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 10:00 am

DIN

இடுக்கி: கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கியிருந்த 10 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தின் இடுக்கி, கோழிக்கூடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.  தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்களும் இடிந்து விழுந்துள்ளன.

இதனிடையே தொடர் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதனை அடுத்து அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதனை கேரள காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் ஈடுபட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.