4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனி: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு பொருள்களை திமுக வழங்கியது

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு உபகரணங்கள் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
தேனி: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு பொருள்களை திமுக வழங்கியது
Updated On :7 ஆகஸ்ட் 2020, 11:59 am

DIN

கம்பம், ஆக. 7 : தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு உபகரணங்கள் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கரோனா தனி பிரிவு வார்டில், நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்ட, கம்பம் நகர  தி.மு.க. சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான கரோனா தடுப்பு பொருட்களான, உடைகள், முககவசம், பாதுகாப்பு கண்ணாடி, உணவு பாத்திரங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியது.

மாவட்ட பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் ஜெ.பொன்னரசனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர். நகர செயலாளர் துரை.நெப்போலியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.