லோயர் கேம்ப்பில் 158 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் நான்கு மின்னாக்கிகள் மூலம், 158 மெகாவாட் மின்சார உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்பில் நான்கு மின்னாக்கிகள் மூலம், 158 மெகாவாட் மின்சார உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்திற்கு உற்பத்தி செய்ய முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தலை மதகு வழியாக திறக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் தண்ணீர் வெளியேறும் கால்வாயில் மரம், செடி, கொடிகள் அடைத்து அடைப்பு ஏற்பட்டது. திறந்துவிடும் தண்ணீரின் அளவு மின்சார நிலையத்திற்கு கிடைக்கவில்லை.
இதனால் வெள்ளி, சனிக்கிழமைகளில் சுமார் 1,600 கன அடி தண்ணீர் வந்தும், இரண்டு மின்னாக்கிகளில் மட்டும் தலா 42 மெகாவாட் என 84 காவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.
அதே நேரத்தில் மூன்று நாள்களாக தலைமதகு கால்வாயில் அடைப்பை புகழை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.
அதன் பேரில் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் விநாாடிக்கு 2,010 கன அடியாக இருந்தது.
இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளும் மின்சார உற்பத்தியை தொடங்கியது. முதல் அலகில் - 32, இதர மூன்று அலகுகளிலும் தலா - 42 என மொத்தம் 158 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.
அணை நீர் மட்ட விவரம்: உயரம் 135.25 அடி, நீர் இருப்பு - 5,929 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 5, 474 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 2,010 கன அடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...