ஆந்திரத்தில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விஜயவாடாவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தடுப்பணை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அணையில் இருந்து 70 கதவுகள் திறக்கப்பட்டு நீர் முழுவதும் கிருஷ்ணா நதியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிருஷ்ணா நதியில் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவிலான தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
இதனால் கிருஷ்ணா நதியையொட்டியுள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய விஜயவாடா ஆட்சியர், அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழிவினரும், மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

