4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா உறுதி: அலுவலகம் மூடல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

News image
உத்தமபாளையம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 12:53 pm

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் மஸ்தூர் பணியாளர் உள்பட பேரூராட்சியின் வாகன ஓட்டுனர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேருக்கு நோய் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் வர தடை விதிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.