ஜார்கண்ட்: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

ஜார்கண்டில் பொது முடக்க காலத்தில் விதிமுறைகளை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப் பெற அரசு முடிவு எடுத்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்
Updated on
1 min read

ஜார்கண்டில் பொது முடக்க காலத்தில் விதிமுறைகளை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப் பெற அரசு முடிவு எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக மாநில அரசு முடிவு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில்,

பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதற்காக மாநிலம் முழுவதும் இதுவரை 204 தொழிலாளர்கள் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதில் 15 வழக்குகள் லோஹர்டாகாவில், 5 சாய்பாசாவில், 4 சஹேப்கஞ்சில், 2 சிம்டேகாவில்  மற்றும் மற்ற பகுதிகளில் 4 வழக்குகளை திரும்பப் பெற உள்ளோம் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com