மேற்குவங்க மாநிலம் டம் டம் பகுதியில் தாய் மற்றும் மகளின் உடல் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது.
டம் டம் பகுதி மால் ரோட்டில் உள்ள குடியிருப்பில் அபர்ணா தாஸ் (வயது 60) மற்றும் அவரது மகள் பைஷகி (25) வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
குடியிருப்பிற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் ஒரு அறையின் படுக்கையின் மேல் அபர்ணா இறந்த நிலையில் படுத்திருந்தார். மற்றொரு அறையில் தூக்கில் தொங்கியபடி பைஷகி உடல் இருந்தது. இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், அபர்ணாவின் கணவர் 3 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் இவர்கள் பல நாள்களாக மன அழுத்தத்தில் இருந்தனர். இவர்களை பார்த்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது என கூறினர்.
இதுகுறித்து டம் டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


