பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,032 பேருக்குத் தொற்று: 900 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் 50,032 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 35,82,698 ஆக உயர்ந்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,032 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 35,82,698 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரேசிலில் இன்று புதிதாக 50,032 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 35,82,698 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 758,783 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் ஒரே நாளில் 1,212 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 1,14,277 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இதுவரை 27,09,638 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மொத்த கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளாகும். அமெரிக்கா 58,41,428 அதிகமான பாதிப்புகளையும், 180,174 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...