கம்பம், கூடலூரில் மார்க்சிய கம்யூ. ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்பம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்பம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 20 தேதி முதல் 26ம் தேதி வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றது.
இதேபோல், கம்பம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நகர பொறுப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். நகர செயலர் ஜி.எம். நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பன்னீர்வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசும், சுகாதார துறையும் தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்து கரோனாவை கட்டுப்படுத்திடவும், உயிர்ப் பலியை தடுக்க கோரியும், கரோனா தொற்று பரிசோதனையை அனைத்து அரசு ஆரம்ப மற்றும் துணை மருத்துவமனைகளில் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.ஜெயராஜ் தலைமை தாங்கினார், பழைய பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...