47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை மறுப்பு -எம்.பி. புகார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கோவை எம்.பி. பிஆர் நடராஜன் புகார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.

News image
கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:00 am

PTI

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கோவை எம்.பி. பிஆர் நடராஜன் புகார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிபிஐ(எம்) மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியர் கே.ராஜமானிக்கு எழுதிய கடிதத்தில், சில தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களைப் பிரசவத்திற்கு அனுமதிக்கவில்லை என புகார்கள் வந்துள்ளது.

மருத்துவமனை சார்பில் தெரிவிக்கும் காரணம் என்னவென்றால், இந்தப் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே இங்கு சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் நாங்கள் அவர்களின் உடல் நிலை அறியாமல் கையாண்டால் வரும் பிரச்சனைகளை மருத்துவமனை எதிர்கொள்ள தயாராக இல்லை என்கிறார்கள்.

அதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்க அழுத்தம் கொடுத்தால், படுக்கைகள் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறுகிறார்கள்.

இதற்கு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகள் இல்லாததே உண்மையான காரணம். 

இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனைகள தீர்க்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.