பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கம்பம் பகுதியில் திராட்சை சாகுபடிக்கு மாறும் வாழை விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

திராட்சை சாகுபடிக்கு மாறும் வாழை விவசாயிகள்

Published On :27 ஜனவரி 2024, 10:42 pm IST

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், வெட்டுக்காடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,  சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை, வாழை, தென்னை உள்ளிட்ட தோட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது வாழை விவசாயம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர்ந்து வாழை விவசாயம் செய்ய முடியாமல் தற்போது திராட்சை சாகுபடி செய்ய நிலத்தை பண்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி திராட்சை விவசாயி சுருளிப்பட்டி  முகுந்தன் கூறியது, 

ஒரு சில சீசன்களில் வாழை விவசாயம் விவசாயிகளுக்கு போதுமான அளவு வருமானத்தை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் பன்னீர் திராட்சை விவசாயம், விவசாயிகளுக்கு கை கொடுக்கின்ற நிலையில் உள்ளது.

தற்போது பன்னீர் திராட்சை, முதல் ரகம் கிலோ 50 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ 45 ரூபாய் வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் இரண்டு மடங்காக விலையை நிர்ணயிப்பார்கள். தற்போதைய கொள்முதல் விலை திராட்சை பயிரிடும் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு சாதகமாக உள்ளது என்றார்.

தற்போது வெளி மார்க்கெட்டில் பன்னீர் திராட்சை கிலோ ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பன்னீர் திராட்சை சாகுபடி சில இடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. சாகுபடி பரப்பளவு கூடும்போது கொள்முதல் விலை குறைய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.