47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை உள்பட பாஜகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை உட்பட பாஜகவின் தலைமை பிரமுகர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
கோவைக்கு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கோவை காந்திபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Updated On :28 ஆகஸ்ட் 2020, 11:52 am

DIN

கோவையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை உள்பட பாஜகவின் தலைமை பிரமுகர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கோவை காந்திபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கோவை காட்டூர் காவல்துறை, அண்ணாமலை உட்பட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.. சேகர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 ஆகியவற்றின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3இன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக கூடுதல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல், ஆபத்தை விளைவிக்கும் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து குற்றங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.