அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் மனைவியின் கண்முன் கணவன் அடித்துக் கொலை

தில்லியின் ஓக்லா தொழிற்துறைப் பகுதியில் காணாமல் போன குழந்தையை தேடிக் கொண்டிருந்த நபரை அவரது கர்ப்பிணி மனைவி முன் அடித்துக் கொன்றுள்ளனர்.

News image
தில்லியில் மனைவி முன் கணவன் அடித்துக் கொலை
Updated On :29 ஆகஸ்ட் 2020, 7:24 am

DIN

தில்லியின் ஓக்லா தொழிற்துறைப் பகுதியில் காணாமல் போன குழந்தையை தேடிக் கொண்டிருந்த நபரை அவரது கர்ப்பிணி மனைவி முன் அடித்துக் கொன்றுள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 40) தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் தில்லி ஓக்லா தொழிற்துறைப் பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அவரது மகன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து குமார் தனது மனைவியுடன் அப்பகுதியில் மகனைத் தேடியுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த சகோதரர்கள் தீரஜ் அரோரா மற்றும் ராகேஷ் அரோரா ஆகிய இருவரிடமும் தனது மகனைப் பற்றுக் கேட்டுள்ளார். 

அவர்களிடம், குமார் திரும்ப திரும்பக் கேட்டதால் கோபமடைந்த அவர்கள் குமாரின் மனைவி முன் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த குமார் சாலையில் மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் குமார் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து குமாரைக் கொன்ற இருவரையும் தில்லி தென்கிழக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.