

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
இதையடுத்து தமிழக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில்,
“இசைத்துறையின் ஜாம்பவான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஹ்மானின் தாயார் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.