மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
மும்பையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


மும்பையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள லால்பாக் குடியிருப்புப் பகுதியில் டிசம்பர் 6ஆம் தேதி காலை சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிகிச்சைப் பலனளிக்காமல் 10 பேர் பலியாகியுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...