மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 625 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 625 கன அடியாக சரிந்துள்ளது.


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 625 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1076 கன அடியாக அதிகரித்தது. சனிக்கிழமை இரவு மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 625 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை 87.11அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 85.95 அடியாக சரிந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.16அடி சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 48.14 டிஎம்சி ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...