தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், முகக்கவசம் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியன வழங்கப்பட்டது.

News image
மானாமதுரை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள், முகக் கவசம் வழங்கல்
Updated On :25 ஜூலை 2020, 6:42 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விடுமுறை காலத்திற்கு உரிய உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியன வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள 255 மாணவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

1 முதல் 5 வகுப்பு முடிய உள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா அரிசி 3 கிலோ 100 கிராமும், பருப்பு 1 கிலோ 200 கிராமும், 6 மமுதல் 8 வகுப்பு முடிய உள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா அரிசி 4 கிலோ 650 கிராமும், பருப்பு 1 கிலோ 250 கிராமும், பள்ளி  தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் அன்பழகன் ஆலோசனையின் படி அனைத்து மாணவர்களுக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் சீருடை மற்றும் முகக் கவசம்  அணிந்து சமூக இடைவெளியுடன் தங்களுக்கான உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கராசு, சத்தியமூர்த்தி, பள்ளி சத்துணவு அமைப்பாளர் (பொறுப்பு) திருமதி காவேரி, பள்ளி ஆசிரியர்கள் தெய்வானை, தேவி, நீலகேசி, சுப்புலெட்சுமி, மரகதம், மகாலெட்சுமி, ராமலெட்சுமி, மற்றும் சத்துணவு பணியாளர்கள் மாணவர்களுக்கு உரிய உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.