கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொன்னமராவதி: விவசாய சங்கங்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

பொன்னமராவதியில் விவசாயத்தை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.

News image

விவசாய சங்கங்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

Updated On :27 ஜூலை 2020, 9:09 am

பொன்னமராவதியில் விவசாயத்தை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும்  மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம் 2020, அத்தியாவசியபொருள்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020  உள்ளிட்ட மூன்று அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொன்னமராவதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.பிரதாப்சிங் தலைமைவகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி வி.பி.நாகலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலர் ஏனாதி ஏஎல்.ராசு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் வேளாண்மையை பாதிக்கும் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி முழக்கமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.