கந்தர்வகோட்டை அருகே மர்மமாக இறந்த சிறுமி: நரபலி கொடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை கைது 

கந்தர்வகோட்டை அருகே மர்மமாக இறந்த சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
கந்தர்வகோட்டை அருகே மர்மமாக இறந்த சிறுமி: நரபலி கொடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை கைது 
Published on
Updated on
1 min read

கந்தர்வகோட்டை அருகே மர்மமாக இறந்த சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா விராலிப்பட்டி அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் இந்திரா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 18 ம் தேதி காலை 7 மணி அளவில் தண்ணீர் எடுப்பதற்காக சற்று தொலைவில் உள்ள ஊற்று குளத்திற்கு சென்றுள்ளார் வித்யா. நீண்ட நேரமாகியும் மகளை காணாததால் பெற்றோரும் உறவினர்களும் தேடி வந்தனர். ஊற்று குளத்திற்கு அருகே உள்ள தைல மரக் காட்டில் தாயார் இந்திரா தேடி சென்று போய் பார்க்கும்போது மகள் வித்யா காயங்களுடனும் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டு இருந்துள்ளார்.

மகளின் பரிதாப நிலையை கண்ட தாயார் இந்திரா அலறி அடித்து கூக்குரலிட்டது உறவினர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி வித்தியாவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார், மேலும் கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். 

மேலும் சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில் உடற்கூர் ஆய்வில் சிறுமி பலத்காரம் செய்யப்படவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து காவல்துறையின் விசாரனை சிறுமியின் தந்தை பன்னீர் செல்வம் மீது திரும்பியது. விசாரணையில் மகளை நரபலி கொடுத்தால் சொத்து பணம் சேரும் என மந்தரவாதி கூறியதாகவும், அதனால் மகளை நரபலி கொடுத்ததாக தந்தை மற்றும் உறவினர் குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும் பெண் மந்திரவாதி ஒருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மந்திரவாதியின் பேச்சை கேட்டு தந்தையே பெற்ற மகளை கொன்ற செயல் பரபரப்பாக இப்பகுதியில் பேசப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com