இந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,07,615-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 8,909 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது
Updated on
1 min read


புதுதில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,07,615-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 8,909 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் மேலும் 217 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,815-ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,01,497 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,00,303 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த 24 மணிநேரத்தில் 217 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. ஒரே நாளில் 8,890 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615-ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்தது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா பாதிப்பு மற்று பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 72,300 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 24,586 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com